அறிவிப்பு: ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களை  சீமான் நேரில் சந்திக்கிறார்

22

அறிவிப்பு: ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களை  சீமான் நேரில் சந்திக்கிறார் | நாம் தமிழர் கட்சி

‘ஒகி’ புயலால் பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் குமரி மாவட்டம் நாகர்கோவில்மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 04-12-2017 (திங்கட்கிழமை) பகல் 1  மணியளவில் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறார். அங்கு நடைபெற்றுவரும் மீட்பு பணிகளை பார்வையிடுகிறார். மேலும் குளச்சல் பகுதி லியோன் நகரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ரூபன் என்பவரது உறவினர் ஒருவர் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ‘ஒகி’ புயலில் சிக்கி கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  இறந்த மீனவருக்கு இறுதி மரியாதை செலுத்த பிற்பகல் 1:30 மணியளவில் குளச்சல் பகுதிக்கு சீமான் செல்கிறார். முட்டம் துறைமுகப் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட மீனவர்களையும் சந்தித்து பேசுகிறார்.

அவ்வயம் குமரி, நாகை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 04-12-2017 திங்கட்கிழமை
நிகழ்வு-1: பிற்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் 
நிகழ்வு-2:  பிற்பகல் 1:30 மணிக்கு குளச்சல், லியோன் நகர் மற்றும் முட்டம் துறைமுகம்
தொடர்புக்கு: +91-9487876655 சு.ராஜேஸ் குளச்சல் தொகுதி செயலாளர் 


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஆர்.கே நகர் இடைத்தேர்தல் : மூன்றாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஓசூர் ஆனந்த் – கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிப்பு