அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 19-12-2017 இறுதி நாள் பரப்புரை | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்

83

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 19-12-2017 இறுதி நாள் பரப்புரை | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் *கா.கலைக்கோட்டுதயம்* அவர்கள் *மெழுகுவர்த்திகள்* சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 18 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

19வது நாள் மற்றும் இறுதி நாளான 19-12-2017 (செவ்வாய்க்கிழமை) அன்று *தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்* அவர்கள் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 08:00 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 39வது வட்டம்,குயிலி குப்பம், ஜீவா நகர், வ.உ.சி. நகர், AE கோயில் தெரு, காமராஜர் சாலை சந்திப்பு, தேசிய நகர், செரியன் நகர் சந்திப்பு, பூண்டி தங்கம்மாள் தெரு, மீனவர் குடியிருப்பு, காசிமேடு, திருவள்ளுவர், தண்டையார் பேட்டை சந்தை.
தொடர்புக்கு: டில்லிபாபு: 9884523508 / செல்வக்குமார்: 9962168009

நேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 43வது வட்டம், தண்டையார் நகர், பெட்ரோல் பங்க் எதிரில்,காசிமேடு.
தொடர்புக்கு: சிதம்பரம்: 8667624558 / சூர்யா: 8072645211

*திருவொற்றியூர், பொன்னேரி, சோழிங்கநல்லூர், இராயபுரம், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு* தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் *விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர்* மாவட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் *பணிகளில்* இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதிநாள் பரப்புரையில் அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகரில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 18வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்
அடுத்த செய்திஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்