கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி : பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்

33

கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி : பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

கதிராமங்கலத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 08-07-2017 காலை 10 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றன.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஅறிவிப்பு: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு