ஓவியர் வீர.சந்தானம் நினைவேந்தல் நிகழ்வு – சென்னை | சீமான் நினைவுரை

161

“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, இன்று (31.07.2017) சென்னையில் நடைபெற்றது.

சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மாலை 3 மணியளவில் தொடங்கி இரவு 11 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு தலைமையேற்றார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்தார். இயக்குநர் கவுதமன் வரவேற்புரை வழங்கி, நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

“பாவலர்கள் நோக்கில் ஓவியர் வீர.சந்தானம்” என்ற தலைப்பில் திரைப்படப் பாடலாசிரியர்களும், “கலைஞர்கள் நோக்கில் ஓவியர் வீர.சந்தானம்” என்ற தலைப்பில் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்களும், “சான்றோர்கள் நோக்கில் ஓவியர் வீர.சந்தானம்” என்ற தலைப்பில் சமூக செயற்பாட்டாளர்களும், “தலைவர்கள் நோக்கில் ஓவியர் வீர.சந்தானம்” என்ற தலைப்பில் ம.தி.மு.க தலைவர் வை.கோ, வி.சி.க தலைவர் திருமாவளவன், த.வா.க தலைவர் வேல்முருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி – இயக்கத் தலைவர்களும் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவுரையாற்றினார்.

31-07-2017 ஓவியர் வீர.சந்தானம் நினைவேந்தல் – சீமான் உரை

முந்தைய செய்திநாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஅறிவிப்பு: கவிக்கோ அபுதுல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – வடபழனி(02-08-2017)